உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுத்திகரிப்பு விதி மீறிய தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவு; மாசுகட்டுப்பாட்டு குழுமம் அதிரடி 

சுத்திகரிப்பு விதி மீறிய தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவு; மாசுகட்டுப்பாட்டு குழுமம் அதிரடி 

புதுச்சேரி : மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறிய பார்மா தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளை சுத்திகரிப்பு செய்ய வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை வாய்க்காலில் விட கூடாது.அந்த நீரை தோட்டத்திற்கும், கழிவறைக்கும் மறுசூழற்சியாக மீண்டும் பயன்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகளின்படி தொழிற்சாலைகள் துவங்க அனுமதி தரப்படுகிறது. ஆனால், தொழிற்சாலைகள் சுத்திகரித்து பயன்படுத்தாமல் சாலையிலும், வாய்க்காலிலும் விடுவது சட்டப்படி தவறு. மேட்டுப்பாளையத்தில் ஒரு பார்மா தனியார் தொழிற்சாலை சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீரை விடுவதாக மாசு கட்டுப்பாட்டு குழுமத்திற்கு புகார் சென்றது. அதை தொடர்ந்து, சுற்றுச்சூழல் பொறியாளர் தேவநாதன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். தொழிற்சாலை விதிமுறைகளை மீறி, கழிவு நீரை சுத்திகரிக்காமல் வாய்க்காலில் விட்டது தெரிய வந்தது.தொழிற்சாலையின் மின்இணைப்பு துண்டிக்கவும், அனைத்து செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் துறை செயலர் ஜவகர் ஒப்புதலின்பேரில், இந்த உத்தரவினை மாசுகட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் பிறப்பித்துள்ளார்.தொழிற்சாலையிடம் சுற்றுச்சசூழல் இழப்பீட்டு தொகை வசூலிக்கவும், தொழிற்சாலையின் வணிக உரிமத்தை ரத்து செய்ய உழவர்கரை நகராட்சிக்கு பரிந்துரை செய்யவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. மாசுகட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் கூறுகையில், 'தொழிற்சாலை கழிவு நீரை சுத்திகரித்து மறுசூழற்சி செய்து பயன்படுத்த வேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக தொடர் ஆய்வுகள் தொழிற்சாலைகளில் நடத்தப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ