பாண்டிச்சேரி லயன்ஸ் கிளப் சென்ட்ரல் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
புதுச்சேரி : லயன்ஸ் கிளப் ஆப் பாண்டிச்சேரி சென்ட்ரல் சங்கத்தின் 36வது புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, செண்பகா ரெசிடென்சி ஓட்டலில் நடந்தது.தலைவராக பாஸ்கரன், செயலாளர்களாக கார்த்திகேயன், சிவக்குமார், பொருளாராக சந்திர சேகர குப்தா ஆகியோர் பதவி ஏற்றனர்.மாவட்ட கவர்னர்கள் சாலை கங்காதரன், கமல் கிேஷார் ஜெயின், முன்னாள் கவர்னர்கள் முரளி, சபாபதி, கல்யாணகுமார் ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.புதிய சேவை திட்டங்களை முன்னாள் கவர்னர் கோபி கிருஷ்ணா, முரளி ஆகியோர் அறிமுகப்படுத்தி வைத்தனர்.விழாவில் ஓராண்டு இயக்குநர்களாக பாஸ்கர், கார்த்திகேயன், ரமேஷ்குமார், செபஸ்டின் மார்ஷியல், குணசேகரன், ஆனந்தன், விவேகானந்தன், ஜெகதீஷ் டி.உச்சிட், சந்தனா ராமன், மரிய எட்வர்டு ஆகியோர் பொறுப்பேற்றனர்.இரண்டாண்டு இயக்குநர்களாகசிவகாந்தன், ரெசி ஜெரார்டு, கில்பர்ட் பெர்னாண்டஸ், பியூஷாண்ட் டி.உச்சிட், ரவிக்குமார், சிவக்கொழுந்து, ராமலிங்கம், தியாகராசன், சுரேஷ், ரவி ஆகியோரும் பொறுப்பேற்றனர்.நிர்வாகிகள் மதிவாணன், ராமகிருஷ்ண ரமணன், பாபு, பாக்கியராஜ் வாழ்த்தி பேசினர். பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.லயன்ஸ் சங்கத்தில், இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி அடுத்த கட்டத்திற்கு சங்கத்தை நகர்த்த வேண்டும் என, மாவட்ட கவர்னர்கள் சாலை கங்காதரன், கமல் கிேஷார் ஜெயின்வேண்டுகோள் வைத்தனர். முன்னாள் கவர்னர்கள் லட்சுமிகுமார், திருநாராயணன், குப்புசாமி, சுவேதாகுமார், முன்னாள் தலைவர்கள் சிவகாந்தன், இன்ஜினியர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.