உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திய கம்யூ.,வினர் தமுக்கடித்து தர்ணா

இந்திய கம்யூ.,வினர் தமுக்கடித்து தர்ணா

புதுச்சேரி:முதலியார்பேட்டையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி இந்திய கம்யூ.,வினர் தமுக்கடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.முதலியார்பேட்டை தொகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். பழுதடைந்த சாலைகளைச் சரி செய்ய வேண்டும். புதிய குடிநீர் பைப்புகளை அமைத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.பழைய மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்களை அமைத்திட வேண்டும். முதலியார் பேட்டை முழுவதுமுள்ள பாதாள சாக்கடை, கழிவுநீர் வாய்க்கால் சீர் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூ., கட்சியினர் முதலியார்பேட்டை வானொலி திடலில் தமுக்கடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை