மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
3 hour(s) ago | 3
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
4 hour(s) ago | 16
புதுச்சேரி:பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் இரண்டு வாலிபர்களுக்கு புதுச்சேரி கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.புதுச்சேரி சின்ன காலாப்பட்டு இ.சி.ஆர்.ரோட்டில் வசிப்பவர் பூபதி, 45; அரசு அதிகாரி. இவரது மனைவி மணிமொழி, 32, தனது வீட்டிலேயே பிரவுசிங் சென்ட்டர் மற்றும் எஸ்.டி.டி.,பூத் வைத்திருந்தார்.வீட்டில் தனியாக இருந்த மணிமொழி, 2002, பிப்ரவரி 14ம் தேதி இரவு கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலை தொடர்பாக காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து கொலையில் தொடர்புடைய மதுரை திருப்பலை தாகூர் நகரை சேர்ந்த கும்மி(எ) குமரன், 29; மற்றும் மதுரை திருபுவனம் நெல்முடிக்கரை பகுதியைச் சேர்ந்த செண்பா (எ)செண்பக ஸ்ரீகுமார், 27; ஆகிய இருவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் 'மணிமொழியிடம் அடிக்கடி பேசி வந்ததாகவும், சம்பவத்தன்று ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதாகவும், அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தெரிவித்தனர். இந்த வழக்கு புதுச்சேரியிலுள்ள இரண்டாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகன்தாஸ் நேற்று மாலை தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் இந்திய தண்டனை சட்டம் 302ன்படி ஆயுள் தண்டனையும், 392ன்படி (வீட்டில் புகுந்து திருடுவது) 7 ஆண்டுகள் தண்டனையும், 454ன்படி (அத்துமீறி வீட்டிற்கு நுழைதல்) 7 ஆண்டுகள் தண்டனை எனவும், அனைத்து தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென தீர்ப்பு கூறினார். தற்போது ஆயுள் தண்டனை பெற்ற இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் நடந்த பெண் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையடைந்து சிறையில் உள்ளனர். மதுரையில் நடந்த இரண்டு கொலை வழக்கு மற்றும் புதுச்சேரியில் நடந்த இரண்டு கொலை வழக்கு என பல்வேறு வழக்குகள் இருவர் மீதும் உள்ளது. புதுச்சேரியில் நடந்த கொலை வழக்கில் இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
3 hour(s) ago | 3
4 hour(s) ago | 16