உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நகராட்சி கணிப்பொறி தொடர் பழுதுமக்கள் பலமணி நேரம் காத்திருப்பு

நகராட்சி கணிப்பொறி தொடர் பழுதுமக்கள் பலமணி நேரம் காத்திருப்பு

புதுச்சேரி:புதுச்சேரி நகராட்சியில் அடிக்கடி கணிப்பொறி பழுதடைந்து வருவதால் பிறப்பு-இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.புதுச்சேரி நகராட்சி பிறப்பு-இறப்பு பதிவு அலுவலகம் கணினிமயமாக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு கடந்த இரண்டு மாதமாக கணிப்பொறி மென்பொருள் சரிவர வேலை செய்யாமல் அடிக்கடி முடங்கி விடுகிறது.இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு பிறப்பு-சான்றிதழ் அலுவலக கணிப்பொறியில் மீண்டும் கோளாறு ஏற்பட்டது. இதனால் சான்றிதழ் பெற வந்தவர்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்தனர். பின்னர் பல மணி நேரத்திற்கு பிறகு கம்ப்யூட்டர் சரி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.நகராட்சி நாளொன்றுக்கு சுமார் 2 ஆயிரம் பதிவுகள் வழங்கப்படுகின்றன. இங்கு மொத்தம் 5 பிரிண்டர்கள் மட்டுமே உள்ளன. இதில் ஒரு பிரிண்டர் மட்டுமே தற்போது வேலை செய்கிறது. இதனால் பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதமும், ஊழியர்களுக்கு சிரமமும் ஏற்படுகிறது. எனவே நகராட்சி அலுவலகத்தில் காலத்துக்கேற்ற நவீன கணிப்பொறிகளை பயன்படுத்தி தடையின்றி சான்றிதழ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி