உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் மாணவர்களுக்குபி.பி.ஓ., பயிற்சி துவக்கம்

காரைக்கால் மாணவர்களுக்குபி.பி.ஓ., பயிற்சி துவக்கம்

காரைக்கால்:காரைக்காலில் புதுச்சேரி பல்நோக்கு சமூக சேவா சங்கம், நபார்டு வங்கி சார்பில் பி.பி.ஓ., வகுப்புகள் துவக்கப்பட்டது.காரைக்கால், புதுச்சேரி பல்நோக்கு சமூக சேவா சங்கம், நபார்டு வங்கியுடன் இணைந்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு பி.பி.ஓ., பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.இதன் துவக்க விழா நேற்றுமுன்தினம் காமராஜர் சாலையில் உள்ள பல்நோக்கு சமூக சேவா மையத்தில் நடந்தது. நபார்டு வங்கி புதுச்சேரி கிளை உதவி பொதுமேலாளர் ஸ்ரீபதி கல்குரா தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.புதுச்சேரி பல்நோக்கு சமூக சேவா சங்க நிர்வாக இயக்குநர் ஆல்பர்ட் தம்பிதுரை வரவேற்றார். இதில் மாணவர்களுக்கு 3 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி காலத்தில் வாழ்க்கை திறன், பேச்சுதிறன் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு இந்நிறுவனமே வேலை வாய்ப்பைஏற்படுத்தி தர உள்ளது,அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை