உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுனாமி குடியிருப்புக்கு மின் இணைப்புமீனவர்களுடன் போராட பா.ஜ., முடிவு

சுனாமி குடியிருப்புக்கு மின் இணைப்புமீனவர்களுடன் போராட பா.ஜ., முடிவு

புதுச்சேரி:காலாப்பட்டிலுள்ள சுனாமி குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பை உடனடியாக வழங்க வேண்டுமெனபா.ஜ., மாநில பொதுச்செயலாளர் சாமிநாதன் கோரிக்கை வைத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:காலாப்பட்டு பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்காக 1400 இலவச குடியிருப்புகள் கடந்த 8 மாதங்களுக்கு முன் மத்திய, மாநில அமைச்சர்களால் வழங்கப்பட்டது. அரசு இலவச வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைத்து 8 மாதங்கள் ஆகியும் இதுவரை மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. இதனால் பயனாளிகள் குடியேறவில்லை. குடியிருப்பில் மக்கள் குடியேறாத காரணத்தால் அப்பகுதி மது அருந்தும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் திகழ்கிறது. அரசு பல கோடி ரூபாய் செலவுசெய்து குடியிருப்புகளை உருவாக்கி இன்னமும் மின் இணைப்பு வழங்காமல் இருப்பது அரசின் நிர்வாகம் செயலிழந்துள்ளதையே காட்டுகிறது. முதல்வர் உடனடியாக குடியிருப்புகளை ஆய்வு செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.போர்க்கால அடிப்படையில் குடியிருப்புக்கான வீட்டுமனைப்பட்டா, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு போன்றவற்றை வழங்க வேண்டும். தவறினால் பா.ஜ., பாதிக்கப்பட்ட மீனவர்களுடன் இணைந்து கலெக்டர் அலுவலகம் முன்பு வரும் 2ம் தேதி உண்ணாவிரதம் இருக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை