உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆதிதிராவிடர் நலத்துறை சங்கம்தொடர் போராட்டம் நடத்த முடிவு

ஆதிதிராவிடர் நலத்துறை சங்கம்தொடர் போராட்டம் நடத்த முடிவு

புதுச்சேரி:தொடர் போராட்டம் நடத்த புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் ஆனந்தன் தலைமை யில் நடந்தது. சிறப்பு விருந்தினராக அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சேஷாசலம் பங்கேற்றார். செயலாளர் அருள்தாஸ், பொருளாளர் ஏழுமலை, துணைத் தலைவர் திருநாவுக்கரசு, துணைச் செயலாளர் நடேசன், துணை பொருளா ளர் தமிழ்ச்செல்வன், இணை செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், விடுதிகளில் உள்ள உதவி வார்டன் பதவிகளை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். நூறு மாணவர்களுக்கு மேல் உள்ள விடுதிகளில் தலைமை சமையலர் பதவியை உருவாக்கி, பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். அனைத்து தினக்கூலி மற்றும் பகுதி நேர ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல் கட்டமாக, வரும் 20ம் தேதி ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் , நவம்பர் 2ம் வாரத்திலிருந்து தொடர் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.செயலாளர் அருள்தாஸ், பொருளாளர் ஏழுமலை, துணைத் தலைவர் திருநாவுக்கரசு, துணைச் செயலாளர் நடேசன், துணை பொருளா ளர் தமிழ்ச்செல்வன், இணை செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை