உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொங்கல் கலை விழா இன்று துவக்கம்

பொங்கல் கலை விழா இன்று துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் நடக்கும் பொங்கல் கலை விழாவில் பங்கேற்க, சுற்றுலாத்துறை அழைப்பு விடுத்துள்ளது.புதுச்சேரி சுற்றுலாத்துறை பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் கலை விழாவை நடத்த திட்டமிட்டது. விழா கடற்கரை சாலை, காந்தி திடலில் இன்றும், நாளையும் மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை நடைபெற உள்ளது. இதில் சினிமா பின்னணி பாடகர்கள் மாலதி, முகேஷ், நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் சின்னப்பொண்ணு, வேல்முருகன் மற்றும் பல்வேறு கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம் என, சுற்றுலாத்துறை அழைப்பு விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை