ஜீவானந்தபுரத்தில் பொங்கல் விழா
புதுச்சேரி: புதுச்சேரி, ஜீவானந்தபுரம் பகுதியில் நாதன் அறக்கட்டளை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, சுப்பிரமணி ஜெகதீசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்து, பொது மக்களுக்கு கரும்பு வழங்கினார்.இதில், ஜீவானந்தபுரம் பகுதி நிர்வாகிகள் நடராஜ், விஜய பூபதி, ஆறுமுகம், சத்தியமூர்த்தி, முருகன், கார்த்தி, சந்திரன், லட்சுமணன், வினோத், கண்ணன், முருகன், அன்புகரசி, ஆனந்தி உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.