உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆரோவில்லில் பொங்கல் விழா; வெளிநாட்டினர் பங்கேற்பு

ஆரோவில்லில் பொங்கல் விழா; வெளிநாட்டினர் பங்கேற்பு

புதுச்சேரி; புதுச்சேரி அருகே உள்ள சர்வதேச நகரான ஆரோவில்லில், மோகன கலாசார மையத்தில் நேற்று பொங்கல் விழா நடந்தது.விழாவில், வெளிநாட்டினர், உள்ளூர் பெண்களுடன் இணைந்து மண் பானையில் பொங்கலிட்டு, செங்கரும்பு, மஞ்சள் கொத்து வைத்து படையலிட்டனர். பின் கும்மியடித்து, நடனமாடினர்.நிகழ்ச்சியையொட்டி உரியடித்தல், கயிறு இழுத்தல், கும்மி அடித்தல், நாட்டுப்புற நடனம் போன்ற தமிழர் பண்பாட்டு அடையாளங்களை விளக்கி நிகழ்ச்சிகள் நடந்தன.நிகழ்ச்சிகளை பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கண்டு களித்தனர்.இதுகுறித்து வெளிநாட்டினர் கூறுகையில், 'தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையின் அனுபவத்தை அறிந்து கொள்ள வந்தோம். பொங்கல் விழா எங்கள் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும்படி இருந்தது. பொங்கல் விழாவை நாங்கள் முதல் முறையாக பார்க்கிறோம். இந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றனர்.இதற்கான ஏற்பாடுகளை, மோகன கலாசார மைய இயக்குநர் பாலசுந்தரம் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ