உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தரமற்ற உணவு பொருள் :ரூ.40 ஆயிரம் அபராதம்

தரமற்ற உணவு பொருள் :ரூ.40 ஆயிரம் அபராதம்

புதுச்சேரி: புதுச்சேரியில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உணவு பாதுகாப்புத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் தரம் குறைந்த பொருட்கள் பறிமுதல் செய்து, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி உணவு பாதுகாப்பு துறையின் நியமன அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையில், இந்திய உணவு தர நிர்ணய ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மாநிலம் முழுதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது, சமையல் எண்ணெயை மூன்று முறைக்கு மேல் மீண்டும் சூடு செய்து பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்திய மிச்ச எண்ணெயை பயோடீசல் யூனிட்டுகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடைகளில் விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களிலும் தயாரிக்கப்பட்ட தேதியும், சிறந்த பயன்பாட்டு காலமும் கட்டாயம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என, எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை சுகாதாரமின்றி உணவு தயாரித்தவர்களுக்கு ரூ.40,000 வரை அபராதம் விதித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !