உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு

புதுச்சேரி : புதுச்சேரியில் 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சேர்ந்த நிலையில் பொறுப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம், புதுச்சேரி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பல்வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்தது.அதில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வேளாண் துறை செயலர் நெடுஞ்செழியன் டில்லிக்கும், காரைக்கால் கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் கோட்டாரு லட்சதீவுக்கும், கல்வித்துறை செயலர் பிரியதர்ஷினி அருணாசல பிரதேசத்திற்கும், தொழிலாளர் துறை செயலர் யாசம் லட்சுமணி நாராயண ரெட்டி மிசோராமிற்கும், தொழில் துறை செயலர் ருத்ரகவுடு லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாற்றப்பட்டனர்.இவர்களுக்குபிற மாநிலங்களில் பணி புரிந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஸ்ரீகிருஷ்ண மோகன் உப்பு, ரவிபிரகாஷ், ஸ்மிதா, முகமது ஹசன் அமித் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டனர்.இவர்கள் புதுச்சேரி அரசில் அண்மையில்பணியில்சேர்ந்த நிலையில் கவர்னர் உத்தரவின்படி, அவர்களுக்கு தற்போது பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.அதன் விபரம் வருமாறு:ஸ்ரீகிருஷ்ண மோகன் உப்பு, மேம்பாட்டு ஆணையர் மற்றும் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு நிதி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை நிவாரணம் மற்றும் மறுவாழ்வு, கிராமப்புற மேம்பாடு' துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர், டி.ஆர்.டி.ஏ.,வின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், உயர் மற்றும் தொழில்நுட்பக்கல்வி, பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் வனம் மற்றும் வனவிலங்குகள் துறைகளின் இணைப்பு அலுவலராக செயல்படுவார்.புதிதாக பணியில் சேர்ந்துள்ள ரவிபிரகாஷ், வரும் ஆகஸ்ட் 14ம் தேதிவரை விடுப்பில் சென்றுள்ளார். அவர் காரைக்கால் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பணியில் சேரும் வரை, வரும் 1ம் தேதி முதல் புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன், காரைக்கால் கலெக்டராக கூடுதல் பொறுப்பு வகிப்பார்.சுமிதா, தொழிலாளர் துறை செயலர் மற்றும் ஆணையர், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சிறப்பு செயலர் மற்றும் இயக்குநர், புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீமுகமது ஹசன் அபித் கலை மற்றும் கலாசாரம், தகவல் மற்றும் விளம்பரத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் முத்தம்மா ஏற்கனவே வகிக்கும் பொறுப்புகளுடன், திட்ட இயக்குநர் பொறுப்பேற்பார். அரசு செயலர் ஜெயந்த்குமார் ரே ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளுடன் கூடுதலாக, சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் தலைவர், பான்கேர் ஆகிய துறைகளின் பொறுப்பை வரும் ஜூலை 1ம் தேதி முதல் வகிப்பார். பாண்டிச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.அரசு செயலர் ஸ்ரீபங்கஜ்குமார் ஷா ஏற்கனவே வகிக்கும் பொறுப்புகளுடன், கூடுதலாக பொருளாதாரம் மற்றும் புள்ளியில் துறையை கவனிப்பார். அரசு செயலர் கேசவன் ஏற்கனவே வகித்துவரும் பொறுப்புகளுடன் அமைச்சரவை மற்றும் ரகசியத் துறையின் சிறப்பு செயலராக பொறுப்பேற்பார். மேலும், மறு உத்தரவு வரும் வரை சட்டத்துறை செயலராகவும் செயல்படுவார்.புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன், வரும் 1ம் தேதி முதல் கூடுதல் பொறுப்பாக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வக்ப் வாரியம் மற்றும் கலால் ஆணையர் பொறுப்புகளை கவனிப்பார்.இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் சரத்சவுகான் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை