மேலும் செய்திகள்
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு
25-Jun-2025
புதுச்சேரி : மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மே மாதம் புதுச்சேரியில் இருந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நெடுஞ்செழியன், ருத்ரகவுடு, பிரியதர்ஷனி, சோமசேகர அப்பாராவ் உள்ளிட்டோர் பல்வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக, பிற மாநிலங்களில் பணிபுரிந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் புதுச்சேரிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.அதன்படி புதுச்சேரிக்கு நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி சவுத்ரி முகமது யாசினுக்கு, வேளாண்மை, கால்நடை, துறைமுகம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் துறைகளின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், இவர் மாநில வரித்துறை செயலாளர் மற்றும் ஆணையராகவும், புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.கவர்னரின் உத்தரவின்படி, இதற்கான உத்தரவை தலைமை செயலர் சரத் சவுகான் பிறப்பித்துள்ளார்.
25-Jun-2025