உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி பங்கேற்க அஞ்சல்துறை அழைப்பு

தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி பங்கேற்க அஞ்சல்துறை அழைப்பு

புதுச்சேரி : தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்க இந்திய அஞ்சல் துறை அழைப்பு விடுத்துள்ளது.அஞ்சலங்களின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் இனக்கொல்லு காவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அஞ்சல் துறை சார்பில், புதுச்சேரி கோட்டத்தில் தேசிய அளவிலான கடிதம் எழுதும்போட்டி கடந்த செப்., 14ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதி வரை நடத்தப்படுகிறது. எழுதுவதின் மகிழ்ச்சி: நவீன யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பின் கீழ் நடத்தப்படும் இந்த போட்டியில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம்.தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என இவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் கடிதம் எழுதி, முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை-600002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.உள்நாட்டு கடித பிரிவில் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், கடித உறை பிரிவில் எழுதுவோர் ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாலும் கைப்பட எழுதி தபாலில் அனுப்ப வேண்டும். 18 வயது நிறைவு பெற்றவர், பெறாதவர் என்ற வயதிற்கான சான்று, போட்டியில் பங்கு பெறுவோரின் பெயர், பள்ளியின் முகவரி தவறாமல் குறிப்பிட வேண்டும்.போட்டியில் தமிழ்நாடு வட்ட அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக 25 ஆயிரம், இரண்டாம் பரிமாக 10 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ