அஞ்சல் காப்பீடு திட்ட சிறப்பு முகாம் புதுச்சேரியில் 30ம் தேதி வரை நடக்கிறது
புதுச்சேரி அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சார்பில் காப்பீடு திட்ட சிறப்பு முகாம் புதுச்சேரியில் வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் இனகொல்லு காவ்யா செய்திக்குறிப்பு:இந்திய அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி ஆகியன இணைந்து விபத்து காப்பீடு திட்டத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க வரும் 30ம் தேதி வரை சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளன.வேலை செய்யும் இடங்கள், வீடுகள், பயணங்களின் போது என பல்வேறு எதிர்பாராத விபத்துகளால் பொதுமக்கள் பாதிக்கின்றனர். இதனால் வருவாய் இழப்பு, கடன், மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்வி, குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. இதனை கருதி, எதிர்பாராத விபத்துகளால் ஏற்படும் செலவுகள், பகுதி ஊனம், நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு அனைத்திற்கும் பயனளிக்கும் விபத்து காப்பீடு திட்டத்தை பொது மக்களுக்கு அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி வழியாக வழங்குகிறது.18 முதல் 65 வயதுக்குட்பட்டோர் இத்திட்டத்தில் சேரலாம். ஆதார் எண், மொபைல் போன் எண், வாரிசுதாரரின் விவரங்கள் போன்ற ஆவணங்கள் தேவை. ரூ.599-க்கு ரூ.10 லட்சம், ரூ.799-க்கு ரூ.15 லட்சம் காப்பீடு என்ற திட்டங்களில் இணையலாம். புதுச்சேரியில் அனைத்து அஞ்சலகங்களிலும் இத்திட்டத்தினை பதிவு செய்யலாம். இதற்கான சிறப்பு முகாம்கள் வரும் 30 தேதி வரை நடக்கிறது. புதுச்சேரி மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி திட்டத்தில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் அனைத்து அஞ்சலகங்களையும் அணுகலாம். அல்லது 9952053573 என்ற எண்ணில் புதுச்சேரி கிளை இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கிளை மேலாளரை தொடர்பு கொள்ளலாம்.