தமிழகத்தின் விடிவெள்ளியே என ரங்கசாமியை வரவேற்று போஸ்டர்
புதுச்சேரி : தமிழகத்தின் விடிவெள்ளியே என, முதல்வர் ரங்கசாமியை வரவேற்று அவர் வீட்டு முன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி காங்., கட்சியில் இருந்து வெளியே வந்து 2011ம் ஆண்டுதனிக் கட்சி (என்.ஆர்.காங்.,) துவங்கினார். கட்சி துவங்கிய இரண்டு மாதத்தில் அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து, ஆட்சியை பிடித்தார். பின் அ.தி.மு.க.,வை கழட்டிவிட்டு சுயேச்சை எம்.எல்.ஏ., ஆதரவுடன் ஆட்சியை துவக்கினார். 2015ம் ஆண்டு காங்., ஆட்சி அமைத்தது. இதற்கிடையில் இரண்டாவது முறையாக பா.ஜ., வுடன் கூட்டணி அமைத்து தற்போது புதுச்சேரியில் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தமிழ்நாட்டு பக்கம் கவனம் சென்றுள்ளது. அதற்காக புதுச்சேரியை ஓட்டியுள்ள தமிழக தொகுதியில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டி, வானுார், மயிலம், நாகப்பட்டினம், சிதம்பரம், திருவண்ணாமலைஉள்ளிட்ட தொகுதியைச் சேர்ந்த என்.ஆர்.காங்., நிர்வாகிகள்தமிழகத்தின் விடிவெள்ளி, வருங்கால தமிழகமே உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய போஸ்டரை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டு எதிரில் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.