மேலும் செய்திகள்
பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
17-Mar-2026
அரியாங்குப்பம்: சிவன் கோவில்களில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டு துவங்கிய முதல் தேய்பிறை பிரதோஷத்தை யொட்டி, சிவன் கோவில்களில் நேற்று மாலை சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி, தவளக்குப்பம் அயிற்றுார் மகா தேவர் சிவன் கோவில், இடையார்பாளையம் ஜலகண்டஸ்வரர் சிவன் கோவில், காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவில், பேட்டையான் சத்திரம் சிவ சடையப்பர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
17-Mar-2026