மேலும் செய்திகள்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷம்
24-Sep-2026
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, காலை 9:00 மணிக்கு வேதாம்பிகையம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மாலை 4:30 மணிக்கு செல்வ நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சகஸ்ர நாம அர்ச்சனை செய்யப்பட்டு, மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், சிவாச்சாரியார்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.
24-Sep-2026