சிறந்த பட்ஜெட் என முதல்வருக்கு பாராட்டு
புதுச்சேரி: குடும்ப தலைவிகளுக்கு கவுரம் அளிக்கும் பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளதாக என்.ஆர்.காங்., மாநில செயற்குழு உறுப்பினர் கோபி பாராட்டியுள்ளார்.அவரது அறிக்கை:முதல்வர் ரங்கசாமி சிறந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இலவச அரிசியுடன் கோதுமை வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு தினந்தோறும் முட்டை, மாலை சிற்றுண்டி, லேப்டாப், அரசு பள்ளியில் படித்து கலை கல்லுாரியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்துள்ளார்.குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை 2,500 ஆக உயர்த்தி, அவர்களுக்கு கவுரவம் கிடைக்க செய்துள்ளார். விவசாயிகளுக்கு மழைக்கால நிவாரணம் ஆண்டுக்கு ரூ. 2,000, தரமான குடிநீருக்கு ரூ. 534 கோடியில் திட்டம் நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கும்.ராஜிவ்- இந்திரா சிலைக்கு இடையே மேம்பாலம் கட்டும் பணி நிறைவடைந்தால் புதுச்சேரி நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும்.மொத்தத்தில் இந்த பட்ஜெட் மாணவர்களின் கல்வியை உறுதிப்படுத்தும், குடும்பத் தலைவிகளுக்கு கவுரவத்தை அளிக்கும் பட்ஜெட் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதற்காக முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.