உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீசாருக்கு பாராட்டு

போலீசாருக்கு பாராட்டு

திருக்கனுார் : சங்கராபரணி ஆற்றில் மூழ்கிய 2 மாணவர்களில் ஒருவரை காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் அவரது நண்பருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் தடுப்பணையில் கடந்த 15ம் தேதி குளித்து கொண்டிருந்த பிளஸ் 1 மாணவர்கள் அந்தோணி, லியோ ஆதித்யன் ஆகியோர் திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.இதைபார்த்த கரையில் இருந்த செல்லிப்பட்டு போலீஸ் கான்ஸ்டபிள் செந்தில்முருகன், அவரது நண்பர் ராஜசேகர் ஆகியோர் ஆற்றில் குதித்து, அந்தோணி என்ற மாணவரை உயிருடன் மீட்டனர். மாணவரை மீட்ட போலீஸ் கான்ஸ்டபிள் செந்தில்முருகன் மற்றும் ராஜசேகரை, திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !