புதுச்சேரியில் முன்கூட்டியே துவங்கிய பனிப்பொழிவு
புதுச்சேரி: புதுச்சேரியில் முன்கூட்டியே தொடங்கிய பனிப்பொழிவால் சளி, காய்சல் பரவலால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். புதுச்சேரியில் கோடை, வடக்கிழக்கு பருவம், குளிர் பனிகாலம் என ஆண்டுக்கு 3 பருவங்கள் நிகழும், இதில் மார்ச் முதல் ஜூன் வரை கடும் வெயில், வெப்பம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடக்கிழக்கு பருவ மழையாகும். டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் தான் புதுச்சேரியில் குளிர்காலம் இருக்கும். வடக்கிழக்கு பருவ மழையான நவம்பர் மாதத்தில் மழைக்கு பதிலாக பனி மூட்டம், குளிர் வந்துவிட்டது. இந்த திடீர் வானிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சளி, இருமல், தொண்டை வலி, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வருகின்றனர்.