உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன் மழலையர் பட்டமளிப்பு விழா

முன் மழலையர் பட்டமளிப்பு விழா

திருக்கனுார் : தேத்தாம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா, முன் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.பள்ளியின் பொறுப்பாசிரியர் குமரன் வரவேற்று, ஆண்டறிக்கை வசித்தார். விழாவில், முதன்மைக் கல்வி அதிகாரி குலசேகரன், வட்டம்-5, பள்ளி துணை ஆய்வாளர் புவியரசன், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன், சீனியர் கிரேடு சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன், கூனிச்சம்பட்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், ஆசிரியர்கள் கந்தவேல், மணிமாறன், பாலசுந்தரம் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். தொடர்ந்து, முன் மழலையர் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சக்திவேல், கிருபா, உமா, புவனேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் ஆசிரியர் அருள்ஜோதி தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ