மாநில அளவில் சிலம்பம் போட்டி பிரசிடென்சி பள்ளி சாதனை
புதுச்சேரி: திருச்சியில் நடந்த மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற பிரசிடென்சி பள்ளி மாணவர்களை பள்ளியின் தாளாளர் கிறிஸ்துராஜ் பாராட்டினார். திருச்சி, புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லுாரியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. போட்டியில், திருச்சி, சென்னை, திருவள்ளூர், வேலுார், கள்ளக்குறிச்சி, விருதுநகர், மதுரை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டிகள் மினி சப் ஜூனியர், சப்ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் நடந்தது. இதில் பிரசிடென்சி பள்ளி மாணவர்கள் நிஷ்வான், ரோஷன், லோகித் பரணி, ஹரிஹரசுதன், பிரசாந்தி ஹர்ஷினி,நிதிஷ், பத்ரிநாத், கிரிஷாந்த், ஷிவானி,சுபாஷினி ஆகியோர் அனைத்து பிரிவுகளிலும் பங்கேற்று வெற்றி பெற்று, சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பள்ளியின் தாளாளர் கிறிஸ்துராஜ் சால்வை அணிவித்து பாராட்டினார்.