உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பத்திரிகை மற்றும் தகவல் அலுவலகம் செய்தியாளர்களுக்கான பயிலரங்கம் 

 பத்திரிகை மற்றும் தகவல் அலுவலகம் செய்தியாளர்களுக்கான பயிலரங்கம் 

புதுச்சேரி: மத்திய அரசின் பத்திரிகை மற்றும் தகவல் அலுவலகம் சார்பில், செய்தியாளர்களுக்கான பயிலரங்கம் தனியார் ஓட்டலில் நடந்தது. பத்திரிகை மற்றும் தகவல் அலுவலக தென் மண்டல இயக்குநர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். அதிகாரி அருண்குமார் வரவேற்றார். பயிலரங்கத்தில் சீனியர் எஸ்.பி., கலைவாணன் பேசுகையில், 'புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் 19, காரைக்கால், ஏனாமில் தலா 10, மாகே 7 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளே, வெளியே செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல், ஒவ்வொரு தொகுதியிலும் 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பணியில் உள்ளனர். இதுவரைக்கும் ரூ. 21 லட்சம் ரொக்கம், 1,500 லிட்டர் மதுபானங்கள், 5,500 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்காக 45 துணை ராணுவ கம்பெனி ஈடுபடுத்தப்பட உள்ளது. அதில், ஏற்கனவே 10 கம்பெனி வந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற கம்பெனிகள் அடுத்தடுத்து வர உள்ளன. தேர்தலில் எந்தவித அசம்பவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க குற்றப்பின்னணி உடையர்கள் 800 பேர் மீது முன்னெச்சரிக்கை வழக்கும், 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டும். 42 பேர் ஊரில் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளனர்' என்றார். இதில், புதுவை செய்தி விளம்பரத்துறை இயக்குநர் சுரேஷ்ராஜ், மற்றும் செய்தியாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை