உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்விரோத தகராறு; 3 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு; 3 பேர் மீது வழக்கு

புதுச்சேரி; கவுண்டன்பாளையம், செண்பகா வீதியை சேர்ந்தவர் சிவமுருகன், 28; கேட்ரிங் சர்வீஸ் வேலை செய்து வருகிறார். இவருக்கும், சோலை நகர் மணிகண்டன் என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது.கடந்த 27ம் தேதி சிவமுருகனின் மனைவியை குடிபோதையில் மணிகண்டன் திட்டி தகராறு செய்தார். தகவலறிந்து சிவமுருகன் வீட்டிற்கு வந்தபோது, அங்கிருந்த மணிகண்டனுடன் தகராறு ஏற்பட்டது.கோபமடைந்த மணிகண்டன், அவரது மாமியார் மாரியம்மாள் மற்றும் அவரது மகன் உள்ளிட்டோர் சிவமுருகனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். கிருத்திகா புகாரின் பேரில், மணிகண்டன் உள்ளிட்ட 3 பேர் மீது கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி