உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரதமரின் மன் கீ பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பு

பிரதமரின் மன் கீ பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பு

புதுச்சேரி: முதலியார்பேட்டையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டறிந்தனர்.பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு, ரேடியோ வாயிலாக உரையாடும், மனதின் குரல் நிகழ்ச்சியின் 118வது பாகம் நேற்று ஆகில இந்திய வானொலியில் ஒலி பரப்பு செய்யப்பட்டது.இது தொடர்பாக, பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி, அறிவுறுத்தலின்படி, புதுச்சேரியில் உள்ள அனைத்து கிளைகள், தொகுதிகள், மாவட்டங்களில் இந்த நிகழ்ச்சியை ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதன் ஒரு பகுதியாக, முதலியார்பேட்டை, அன்னை சிவகாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்பட்டது. அதில், பா.ஜ., நிர்வாகிகள், வெற்றிச் செல்வம், சக்தி கிருஷ்ணராஜ், இன்பசேகர், சின்னத்தம்பி, புவனேஸ்வரி, அன்னை சிவகாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல்வர் எழில் கல்பனா உட்பட பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ