மாணவர் நாள் விழா முதல்வர் பங்கேற்பு
புதுச்சேரி : புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில், காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு 'மாணவர் நாள் விழா' காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.விழாவை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்து, பொதுத்தேர்வில் மாநில அளவிலான அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். பள்ளி கல்வித்துறை இயக்குநர் அமன் ஷர்மா வரவேற்றார்.விழாவில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் ஜான்குமார், கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, சமக்ர சிக் ஷா மாநில திட்ட இயக்குநர் எழில்கல்பனா, முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவையொட்டி, பல்வேறு உலக நாடுகளின் இருப்பிடம், மொழி, உணவு மற்றும் கலாசாரம் ஆகியவற்றை விளக்கும் வகையிலான கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.