உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்கூட்டர் மீது தனியார் பஸ் மோதல் கணவன் கண் முன்னே மனைவி பலி அதிவேகமாக வந்த பஸ் ஹாரன் அடித்ததால் விபரீதம்

ஸ்கூட்டர் மீது தனியார் பஸ் மோதல் கணவன் கண் முன்னே மனைவி பலி அதிவேகமாக வந்த பஸ் ஹாரன் அடித்ததால் விபரீதம்

புதுச்சேரி : ரெட்டியார்பாளையத்தில் தனியார் பஸ் மோதி கணவருடன் ஸ்கூட்டியில் வந்த மனைவி இறந்தார்.புதுச்சேரி ஏம்பலம், புது நகர், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள், 65; கட்டட மேஸ்திரி. இவரது மனைவி கிருஷ்ணம்மாள், 55. இருவரும் நேற்று காலை கட்டுமான தொழிலாளர் சங்கத்தில் தீபாவளி கூப்பன் வாங்குவதற்கு ஸ்கூட்டியில் புறப்பட்டனர்.பெருமாள் வாகனத்தை ஓட்டினார். காலை 9:30 மணிக்கு, உழவர்கரை கரூர் வைசியா வங்கி அருகே சென்றபோது, பின்னால் வந்த டி.என்.31.சி.பி.2600 என்ற எண்ணுடைய விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வந்த பாலாஜி பஸ், ஹாரன் அடித்தார்.அப்போது சாலையோரம் செல்ல ஒதுங்கியபோது, நிலை தடுமாறிய ஸ்கூட்டி மீது பாலாஜி பஸ் மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். கிருஷ்ணம்மாள் மீது பஸ் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.பெருமாளுக்கு கை கால்களில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் பெருமாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.விபத்து நடந்த இடத்தின் அருகிலே நேற்று முன்தினம் இரவு தாண்டவன், 61; என்ற நபர் பைக் மோதி உயிரிழந்தார். 12 மணி நேரத்தில் ஒரே இடத்தில் நடந்த இரு வேறு விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை