மேலும் செய்திகள்
கைப்பந்து போட்டி: சமுதாய கல்லுாரி மாணவிகள் சாதனை
27-Feb-2025
புதுச்சேரி, : புதுச்சேரி பல்கலைக்கழகம், கல்லுாரிகளுக்கு இடையேயான பேட்மின்டன் போட்டியில் இதயா கல்லுாரி அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. புதுச்சேரி பல்கலைக்கழகம், இதயா மகளிர் கல்லுாரி சார்பில் கல்லுாரிகளுக்கிடையான இரண்டு நாள் பேட்மிண்டன் போட்டி நடந்தது. இதயா மகளிர் கல்லுாரியில் நடந்த போட்டியை, கல்லுாரி முதல்வர் பாத்திமா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். போப் ஜான்பால் கல்வியியல் கல்லுாரி, காரைக்கால் பஜன்கோ விவசாயம் மற்றும் ஆய்வு நிறுவனம், இதயா மகளிர் கலை மற்றும் அறிவில் கல்லுாரி, ஆச்சாரியா பொறியியல் கல்லுாரி, பல்கலைக்கழக சமுதாய கல்லுாரி உள்ளிட்ட 9 கல்லுாரிகளை சேர்ந்த மகளிர் அணிகள் கலந்து கொண்டன. பல்வேறு சுற்றுகளாக நடந்த போட்டியில், இதயா மகளிர் கல்லுாரி அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. காரைக்கால் பஜன்கோ விவசாயம் மற்றும் ஆய்வு நிறுவனம் இரண்டாமிடத்தையும், பல்கலைக்கழக சமுதாய கல்லுாரி மூன்றாம் இடத்தையும் பெற்றன. தொடர்ந்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை இதயா கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் சாமுவேல் ஜேசுதாஸ், பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் இளையராஜா செய்திருந்தனர்.
27-Feb-2025