உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு

புதுச்சேரி: வாதானுார், அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.  விழாவிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் வீரையன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். விழாவில், மண்டல அளவிலான கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பாரிஸ் பல்கலைக்கழகத்திற்கு அறிவியல் ஆய்வறிக்கையை  சமர்ப்பித்து சிறப்பு பரிசு வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளியில் நடந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. ஆசிரியர் செந்தமிழ் செல்வி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரேணு, வேலவன், சபரிநாதன், ப்ளோரன்ஸியா, நித்திலவல்லி, சுகந்தி, ஸ்ரீமதி, விஸ்வ பிரியா, ஓம் சாந்தி, சுஜாதா, மகேஸ்வரி, ஆஷா நந்தினி, அகல்யா, சுமதி, நிஷாந்தி, ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை