ஓவியப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
புதுச்சேரி: ஓவியப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.சிங்காரவேலர் பிறந்த நாளை முன்னிட்டு, வம்பாகீரப்பாளையம், தட்சணாமூர்த்தி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு துவக்க பள்ளியில் ஓவியப்போட்டி நடந்தது. இப்போட்டியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், மீனவர் கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள், தலைமையாசிரியர் வேளாங்கன்னி, பொறுப்பாசிரியை இந்துமதி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் கோபி, ரவி, ராகேஷ் கலந்து கொண்டனர்.