மேலும் செய்திகள்
போலீசார் 317 பேருக்கு பதவி உயர்வு
02-Mar-2026
புதுச்சேரி: புதுச்சேரி வேளாண் பொறியியல் அதிகாரி ஜெயக்குமாருக்கு துணை இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி வேளாண் துறையில் 29 ஆண்டுகளாக வேளாண் பொறியியல் அதிகாரியாக பணியாற்றி வரும் ஜெயக்குமாருக்கு, வேளாண் பொறியியல் பிரிவின் துணை இயக்குனராக பதவி உயர்வு அளிக்கப்பட் டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ksghzuks&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, மாநில நிலத்தடி நீர் பிரிவு மற்றும் மண்வள பாதுகாப்பு அலுவலகத்தில் துணை இயக்குனராக பதவி ஏற்றுள்ளார். இவருக்கு காரைக்கால் வேளாண் பொறியியல் துணை இயக்குனர் பதவியும் கூடுதலாக ஒதுக்கப்பட் டுள்ளது. துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்ற ஜெயக்குமார், மண்ணாடிப்பட்டு மற்றும் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையராக 4 ஆண்டு களுக்கு மேல் பணியாற்றியது குறிப்பிடத் தக்கது.
02-Mar-2026