கான்ஸ்டபிள்களுக்கு ஏட்டாக பதவி உயர்வு
புதுச்சேரி: புதுச்சேரியில் பணியாற்றிய 129 கான்ஸ்டபிள்களுக்கு ஏட்டாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.பல்வேறு போலீஸ் நிலையங்களில் கான்ஸ்டபிள்களாக பணியாற்றி வருவோருக்கு சீனியரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.இதையடுத்து புதுச்சேரி காவல் துறையில் பணியாற்றும் 129 போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு ஏட்டாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை சீனியர் எஸ்.பி., சுபம் கோஷ் பிறப்பித்துள்ளார்.