உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மறியல்

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மறியல்

வில்லியனுார்: வில்லியனுார் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் மாங்குளத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியிக்கு வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.சில தினங்களாக மாங்குளம் பகுதிக்கு குடிநீர் சரிவர கிடைக்காமல் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்தனர். கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் தொகுதி அமைச்சர் சாய்சரவணன் குமார் ஆகியோரிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டும் பயன்இல்லை.இதனால் ஆத்திரமடைந்த மாங்குளம் பகுதி மக்கள் சேதராப்பட்டு - பத்துக்கண்ணு சாலையில் நேற்று காலை 8:30 மணியளவில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். வாகனங்கள் சாலையில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனுார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட மக்களிடம்பேச்சு வார்த்தை நடத்தினர். சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதனை ஏற்று மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால்அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை