உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்சோ வழக்கில் எஸ்.எப்.ஐ., மாணவரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

போக்சோ வழக்கில் எஸ்.எப்.ஐ., மாணவரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: போக்சோ வழக்கு பதியப்பட்ட எஸ்.எப்.ஐ., மாணவரை கைது செய்ய வலியுறுத்தி ஏ.பி.வி.பி., அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுச்சேரி பல்கலையின், சமுதாய கல்லுாரியில் கேரளாவை சேர்ந்த மாணவர் முனைவர் பட்டம் பயின்று வருகிறார். இந்திய மாணவர் சங்கத்தில் உள்ளார். இவரால் கேரளாவில் பாதிக்கப்பட்ட பள்ளி சிறுமி ஒருவர், கடந்த வாரம் கண்ணனுார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், அந்த மாணவர் மீது, போக்சோ பிரிவில் வழக்கு பதிந்த போலீசார், அவரை இதுவரை கைது செய்யவில்லை. அதனை கண்டித்தும், மாணவரை உடன் கைது செய்ய வலியுறுத்தியும், மாணவரின் முனைவர் படிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரி பல்கலைக்கழக அகில பாரதிய வித்தியாத்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.,) அமைப்பினர் நேற்று மாலை புதுச்சேரி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் அர்பித் தலைமை தாங்கினார். மக ளிர் ஒருங்கிணைப்பாளர் வேதாஞ்சலி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோகிலா உட்பட பலர், எஸ்.எப்.ஐ., அமைப்பை கண்டித்து கோஷமிட்டனர். புதுச்சேரி பல்கலை.,யில் நடந்த பாலியல் வன்முறைக்கு எதிராக எஸ்.எப்.ஐ., போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்த அமைப்பின் உறுப்பினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை