கோர்ட் வளாகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி இந்து முன்னணி வழக்கறிஞர் அணி சார்பில் திருப்பரங்குன்றத்தில், தீபம் ஏற்றாததை கண்டித்து, ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (நவ.,25) நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி வழக்கறிஞர் அணி தலைவர் கணேஷ் ஞானசம்பந்தன் தலைமையில், பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு தலைவர் ரமேஷ், பரிவார் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டு, திருப்பரங்குன்றம் தீபத் துாணில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியும், தமிழக அரசு தீபம் ஏற்றாததை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.