உள்ளூர் செய்திகள்

தர்ணா போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி பஞ்சாலை தொழிற்சங்க காங்., ஏ.எப்.டி., தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.எப்.டி., நுழைவு வாயில் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பஞ்சாலை தொழிற்சங்க காங்., ஏ.எப்.டி., தலைவர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். நாகரத்தினம், அசோகன், கிருஷ்ணமூர்த்தி, சேகர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் குப்புசாமி கண்டன உரையாற்றினார்.போராட்டத்தில் ஏ.எப்.டி., ஆலை மூடப்பட்டு, 5 ஆண்டாகியும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய போனஸ், சம்பளம் உள்ளிட்ட நிலுவை தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். விருப்ப ஓய்வு பெற்ற 1205 தொழிலாளர்களுக்கு கிராஜூவிட்டி 5 சதவீத வட்டி தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ