மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
24-May-2025
அரியாங்குப்பம் : வீராம்பட்டினம் சிங்காரவேலர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிளை பாஸ்கர் எம்.எல்.ஏ., வழங்கினார்.சமூகநலத்துறை மூலம் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வீராம்பட்டினம் சிங்காரவேலர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை வெங்கடேஸ்வரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, பாஸ்கர் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கினார்.நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கிராம முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
24-May-2025