லாஸ்பேட்டையில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
புதுச்சேரி: லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காசநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகங்கள் வழங்கும் விழா நடந்தது. புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காசநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கு நிக் ஷய் மித்ரா ஊட்டச்சத்து உணவு பெட்டகங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார தலைமை மருத்துவர் பத்மனி தலைமை தாங்கினார் காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி மருத்துவர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். சுகாதார பெண் மேற்பார்வையாளர் ராதாமுத்து காசநோய் பற்றிய விழிப்புணர்வு, பரவும் விதம் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கிப் பேசினார். விழாவில் மக்கள் நல சேவை இயக்க தலைவர் நந்தா ஜெய � தரன் காசநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கு தனது சொந்த செலவில் ஊட்டச்சத்து உணவு பெட்டகங்களை வழங்கினார். முடிவில் ஏ.என்.எம்., மீரா நன்றி கூறினார்.