ரெயின்கோட் வழங்கல்
புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட ராஜராஜேஸ்வரி நகர் ஆட்டோ ஓட்டுநர்கள், துப்புரவு தொழிலாளர்களுக்கு சீருடை, ரெயின் கோட் வழங்கும் நிகழ்ச்சிநடந்தது.காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., ஆட்டோ ஓட்டுநர்கள், துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் காங்., மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத், காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ரெயின்போ நகர் இளைஞர் காங்., செய்திருந்தது.