விளையாட்டு உபகரணம் மாணவர்களுக்கு வழங்கல்
திருக்கனுார்: திருக்கனுார் பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார். மண்ணாடிப்பட்டு தொகுதி, திருக்கனுாரில் அமைந்துள்ள வீட்டில் தங்கி அமைச்சர் நமச்சிவாயம், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு, நிவர்த்தி செய்து வருகிறார்.இந்நிலையில், திருக்கனுார் பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது விளையாட்டு திறனை மேம்படுத்தி கொள்ள விளையாட்டு உபகரணங்களை வழங்கும்படி அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் நமச்சிவாயம் அப்பகுதி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் நேற்று வழங்கினார்.இதில், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், வர்த்தக அணி மாநில தலைவர் கலியபெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.