மாணவர்களுக்கு சீருடை வழங்கல்
புதுச்சேரி:கருவடிக்குப்பம் அரசு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் நோட்டு புத்தகங்களை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வழங்கினார். புதுச்சேரி அரசு கல்வித்துறையின் மூலம் கருவடிக்குப்பம் அரசு ஆரம்ப பள்ளியில் பயிலும் 250 மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள், நோட்டு புத்தகம் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வழங்கினார். இதில், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.