மேலும் செய்திகள்
ரூ.5.41 லட்சத்தில் நலத்திட்ட உதவி
12-Dec-2024
கொடி நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
09-Dec-2024
புதுச்சேரி : புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத் தாய்மார்கள் நலச் சங்கத்தின் காரைக்கால் மாவட்டக் கிளை துவக்க விழா காரைக்காலில் நடந்தது.மாநிலத் தலைவர் மோகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் திருமுருகன் பங்கேற்று, காரைக்காலை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை, ஓய்வூதியம் இல்லாத வீரத் தாய்மார்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார். காரைக்கால் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத் தாய்மார்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. விழாவில், உதவித் தலைவர்கள் கந்தசாமி, சுரேஷ்குமார், செயலாளர் தவும்னிக், இணைச் செயலாளர் நீலவண்ணன், பொதுநலத் தொடர்பு அதிகாரி ராமமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் ராமநாதன், லட்சுமி நாராயணன், வெங்கடாஜலபதி, குமரவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
12-Dec-2024
09-Dec-2024