திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு பி.ஆர்.டி.சி., சிறப்பு பஸ் இயக்கம்
புதுச்சேரி : திருப்பதியில் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவத்திற்கு பி.ஆர்.டி.சி., சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. பி.ஆர்.டி.சி., மேலாளர் (போக்குவரத்து) சிவானந்தம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருப்பதியில் நடைபெறும் புராட்சி மாத பிரம்மோற்சவத்தையொட்டி பி.ஆர்.டி.சி., சார்பில் இன்று (17 ம் தேதி) முதல் அக்டோபர் 19ம் தேதி வரை சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ் தினசரி இரவு 9:30 மணிக்கு புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். திருப்பதியில் இருந்து காலை 7:30 மணிக்கு புதுச்சேரிக்கு புறப்படும். இதற்கான கட்டணம் ரூ.300 ஆகும். ஏற்கனவே புதுச்சேரியில் இருந்து காலை 9 மணிக்கும், இரவு 10 மணிக்கும் பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.