உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளி மூடப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

பள்ளி மூடப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

புதுச்சேரி: சின்ன வீராம்பட்டினம் அரசு பள்ளியை திடீரென மூடியதை கண்டித்து, பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி, சின்ன வீராம்பட்டினத்தில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வந்தது. இப்பள்ளியில், அப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.இந்நிலையில், பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளியை திடீரென இழுத்து மூடி, இங்கு குறைந்த மாணவர்கள் பயின்று வருவதால், அவர்கள் அருகிலுள்ள ஓடைவெளி அரசு பள்ளிக்கு சென்று பயிலுமாறு அறிவிப்பு நோட்டீஸ் நேற்று ஓட்டப்பட்டது.இதையறிந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பள்ளியை மூடி நோட்டீஸ் ஓட்டியதை கண்டித்து பள்ளியின் எதிரே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பள்ளியை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, புதுப்பித்து தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.இதற்கு, கல்வித்துறை அதிகாரிகள், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரையில் பள்ளி சமுதாய நலக்கூடத்தில் இயங்கும் எனவும் உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் காலை 10:00 முதல் 11:00 மணி வரை போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை