மேலும் செய்திகள்
போதையில் தகராறு 3 வாலிபர்கள் கைது
04-Oct-2024
புதுச்சேரி: இ.சி.ஆரில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, இ.சி.ஆர்- மடுவுப்பேட் சாலை சந்திப்பில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.அதில், முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரை சேர்ந்த லிங்கேஷ்குமார், 24; என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
04-Oct-2024