உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் ஸ்டேஷன்களில்  மக்கள் குறைகேட்பு கூட்டம்

போலீஸ் ஸ்டேஷன்களில்  மக்கள் குறைகேட்பு கூட்டம்

புதுச்சேரி : போலீஸ் ஸ்டேஷன்களில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், மக்கள் தங்கள் குறைகளை மனு மூலம், போலீஸ் உயரதிகாரிகளிடம் அளித்தனர்.வாரந்தோறும் சனிக் கிழமைகளில் புதுச்சேரியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்து வருகிறது. சேதராப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில், நேற்று நடந்த குறைகேட்பு கூட் டம், டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் தலைமையில் நடந்தது.அதே போல, ஒதியஞ்சாலை போலீஸ் டேஷனில், கிழக்கு எஸ்.பி., ரகுநாயகம், முதலியார்பேட்டையில், தெற்கு எஸ்.பி., பக்தவச்சலம், மங்கலம் போலீஸ் ஸ்டேனில், மேற்கு எஸ்.பி., வம்சீதா ரெட்டி தலைமையில், ஒரு மணி நேரம் குறைகேட்பு கூட்டம் நடந்தது.கூட்டத்தில், பொதுமக்கள் தங்களின் பிரச்னைகளை மனு மூலம், போலீஸ் உயரதிகாரிகளிடம் அளித்தனர். மனுவை ஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மக்களிடம் போலீசார் உறுதியளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ