உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜல்லிக்கட்டு காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி

ஜல்லிக்கட்டு காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி

கச்சிராயபாளையம் : கள்ளக்குறிச்சி அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.கச்சிராயபாளையம் அடுத்த பரியம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் 34, இவர் 8 வயது ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வந்துள்ளார். இந்தக் காலை மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்று வந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் எடுத்துவாய்நத்தம் கிராமத்தில் நடந்த வடமாடு பிடிக்கும் நிகழ்ச்சிக்கு தனது காளையை டாட்டா ஏஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.அப்போது காளையை டாட்டா ஏஸ் வாகனத்திலிருந்து கீழே இறக்க முயன்ற போது காளைக்கு பலத்த காயம் ஏற்பட்டு மயங்கியது. தொடர்ந்து காளைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி காளை நேற்று இறந்தது. இறந்த காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின், மாலை அடக்கம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை