உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  துணை ஜனாதிபதிக்கு புதுச்சேரியில் பொது வரவேற்பு

 துணை ஜனாதிபதிக்கு புதுச்சேரியில் பொது வரவேற்பு

புதுச்சேரி: துணை ஜனாதிபதியாக ராதாகிருஷ்ணன் பதவி ஏற்று முதல்முறையாக புதுச்சேரிக்கு வருவதையொட்டி அரசு சார்பில் அவருக்கு பொது வரவேற்பு கம்பன் கலையரங்கில் அளிக்கப்பட்டது. விழாவிற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வரவேற்றார். கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி முன்னிலை வகித்தார்.விழாவில் சபாநாயகர் செல்வம், லட்சுமிநாராயணன், தேனீஜெயக்குமார், திருமுருகன், ஜான்குமார், எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ.,க்கள் அனிபால்கென்னடி, ஆறுமுகம், கல்யாணசுந்தரம், பாஸ்கர், லட்சுமிகாந்தன், சிவசங்கர், தீப்பாய்ந்தான், தலைமை செயலர் சரத்சவுகான், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். புத்தாண்டு வாழ்த்து: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேசும்போது, புதுச்சேரி மக்களுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் 2026 புத்தாண்டு, அமைதி, செழிப்பு, நல்ல ஆரோக்கியம், புதிய நம்பிக்கையை ஒவ்வொரு இல்லத்துக்கும் கொண்டு வந்து சேர்க்க இறைவனை வேண்டுகிறேன் என்றார் அண்ணன் ரங்கசாமி: விழாவில் அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டு தனது அனுபவங்களை நினைவு கூர்ந்த துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், முதல்வர் ரங்கசாமியை பற்றி குறிப்பிடும்போது, அண்ணன் ரங்கசாமி என்று குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி